Posted by plotenewseditor on 27 September 2017
Posted in செய்திகள்
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் இன்றுமுற்பகல் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளுக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
06 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more