கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் 31பேரும் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீட்டை பௌத்த பிக்குகள் நேற்று சுற்றிவளைத்ததை அடுத்து அங்கு பதற்றமான நிலை தோன்றியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்பின் பராமரிப்பில் கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடொன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 ரோஹிஞ்சா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read more







2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 