Header image alt text

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர். Read more

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் ஊடாக கைதுசெய்யும் பகிரங்க பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் விளக்கங்களை கருத்திற் கொண்ட நீதவான் லங்கா ஜயரத்ன, உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாருக்கு ஆங்கில மொழி மூலம் பகிரங்க கைது ஆணை உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more

மனித உரிமைகள் பேரவையின் 37வது அமர்வில் இன்று முன்வைக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம அறிக்கையும், அதுதொடர்பான விவாதமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தின் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. Read more

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குவதற்கு ரியர் அட்மிரல் ஆனந்த குருகேயை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாதம் 23 ஆம் திகதிக்கு அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். Read more

ஏதிலிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்து, அவுஸ்திரேலியாவின் நோர்த் கோர்ட் பகுதியில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஏதிகளுக்கான நடவடிக்கை கூட்டணியினால், கடந்த 10 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் சுமார் 100 பேர் பங்கேற்றிருந்தாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. ஏதிலிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இப் பேரணியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணையில் இன்று ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கையெழுத்திட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து இன்றைய தினம் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர். 14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் 12 காரணங்கள் மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ்,

தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேற்படி குற்றங்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரம், பொலிஸாருக்கு உண்டென, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டீ.சில்வா தெரிவித்தார். Read more

உலகில், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் 2018ஆம் ஆண்டுப் பட்டியலில், இலங்கைக்கு, 116ஆவது இடம் கிடைத்துள்ளது. கடந்த வருடம், 120ஆவது இடத்தைப் பிடித்திருந்த இலங்கை, நான்கு படிகள் முன்னேறி, 116ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை, பின்லாந்தும் இரண்டாவது இடத்தை, நோர்வேயும் பிடித்துள்ளன. இலங்கையின் அயல் நாடான இந்தியாவுக்கு, 133ஆவது இடம் கிட்டியுள்ளது. ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது. Read more

நில அளவைத் திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதை எதிர்த்து இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது. இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த காலக்­கி­ரம மீளாய்வு தொடர்­பான விவாதம் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. Read more