நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் 26,623 குடும்பங்களை சேர்ந்த 106,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், சீரற்ற காலநிலையினால் 2199 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 35 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 751 ஏனைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
சீரற்ற வானிலையின் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 6,255 குடும்பங்களைச் சேர்ந்த, 24,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பொதி சோதனையாளர்களின் பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநீசன் ஆவார்.
தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 1500 பேர் 2 வருட ஆசிரியர் பயிற்சியை நினைவு செய்து இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் இணைந்து கொள்கின்றனர்.