Header image alt text

யுத்தக் காலத்தின் இறுதியில் புலிகள் அமைப்பினரால், புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, கிளிநொச்சிப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தோண்டும் முயற்சியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி அரியநகர் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்கத்தை தோண்டும் பணி 3 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் பொலிஸாருக்கு எதுவும் கிடைக்காததால் நிறுத்தப்பட்டுள்ளது. Read more

11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து கப்பம் பெற்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத்தை கைது செய்வதற்காக காவல்துறை, பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.

சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி என்றழைக்கப்படும் நேவி சம்பத்தை கைது செய்வதற்காக ஏற்கனவே கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. Read more

குவைத் நாட்டிற்குள் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரை குவைத் நாட்டின் பார்வன்யா பகுதியில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more

ஹபராதுவ – தலவெல்ல கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பில், நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த பெக்கோ இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் தலவெல்ல பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதோடு, Read more

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126ஆவது ஜனனதினம் இன்றையதினம் நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.

பிரதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர்.

30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குடியேறி வருவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவே இந்த நடிவடிக்கையை மேற்கொண்டதாகக் தெரிவிக்கின்றனர். குறித்த மக்கள் தங்களின் காணிகளில் தாங்கள் சுதந்திரமாகக் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தே மக்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறியுள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்,பொலிஸாருக்கு எதிராக மோட்டார் சைக்கிள் சாரதிகளினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்களில் அதன் சாரதிகளால், மாற்றம் செய்யப்பட்ட சைலன்சர்களை பொலிஸார் அகற்ற உத்தரவிடுவது தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் கிடக்கப்பெற்றுள்ளது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more

45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஞ்சலதிபர் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அஞ்சலதிபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அவர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றி வந்த நிலையில், அங்கு வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள இரு மாடி கட்டடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் தற்போது தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். குறித்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.