Header image alt text

கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 62 வயதான, கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை ராசரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கோப்பாய் சந்தி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது. Read more

மத்திய மாகாணத்திலும் நீடித்துவரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்தார். Read more

லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இலங்கையர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்ட நிலையில், இது தொடர்பில் மணிமாறன் செல்லையா என்ற மற்றுமொரு இலங்கையர் கைதாகியுள்ளார். Read more

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காண்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. Read more

வவுனியாவில் இன்றுகாலை புதிய பேருந்து நிலையத்தில் 4கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்றுகாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் கேரளா கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட பொலிசார் யாழ்ப்பாணம் தாளையடியைச் சேர்ந்த கணேசலிங்கம் கோகிலம் 44 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். Read more

தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்று வரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதன் போது மேற்பொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதோடு 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடியின் அண்ணாநகரில் இன்றும் பதற்ற நிலை நீடிக்கிறது. Read more

உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பதில் பிரதம நீதியரசருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்து கொண்டிருந்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை குறிப்பிட்ட இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப் பாக்கு விற்பனை செய்வதாக பல தரப்பினராலும், Read more

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு -5) மற்றும் எஸ்.ஏ.எஸ் (விசேட வான்சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. Read more