Header image alt text

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பில் தான் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். Read more

சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்கதியான குறித்த இலங்கையர்களை மீட்பதற்காக, அடிஸ்அபாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச குடியேறிகளுக்கான ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 14 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

அனைத்து புகையிரத தொழிநுட்ப சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்களை உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சேவைக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர நுழைவாயில் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில், நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மேலும் சில மனித எலும்புத் துண்டுகளும் மனித பற்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

விற்பனை நிலைய வளாகத்திலும் மன்னார் பொது மயானத்துக்குப் பின்பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மேற்படி விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணிலுமே, இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Read more