Header image alt text

யாழ். தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கோகிலாக்கண்டிக் கிராமத்தில் அமைந்துள்ள காந்தி முன்பள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க, அப் பள்ளிச் சிறுவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான மண்ணில் வடிவமைக்கப்பட்ட நீர்க் குடுவை, அடுப்பு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை புளொட் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

22.05.2018 அன்று இடம்பெற்ற இந் நிகழ்வில் ரூ 7500/= பெறுமதியான இப் பொருட்கள், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் R. சர்வேஸ்வரன், காந்தி சனசமூக நிலையத்தின் தலைவர் A. பாலேந்திரா, பொருளாளர் K. சிறீஸ்கந்தராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சாவகச்சேரி பிரதேச செயற்பாட்டாளர் திரு. A.சிவகுமார், கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பொருளாளர் ஆர்.தயாபரன் முன்னிலையில் முன்பள்ளி ஆசிரியை லாவன்யா சற்குணநாதனிடம் கையளிக்கப்பட்டிருந்தன. Read more

இலங்கையில் சீனா தமது இராணுவமயமாக்களை மேற்கொள்வதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டவை அன்றி வேறில்லை என்று சீனாவின் தூதுவர் செங் க்சியுவான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகள் இருதரப்பு நன்மை சார்ந்தது. Read more

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்த உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று கையளித்துள்ளது.

தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் கையளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, Read more

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நிவாரணப் பணிகளுக்காக தற்போதைய நிலையில் 49 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள டிங்கி படகுகளை 49ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. Read more

தமிழ்நாடு தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. “மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா?, Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த மொழிபெயர்ப்பு கற்கைகள் பாடநெறிக்கான தெரிவுப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி 683 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள மயிலிட்டியில் சுமார் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் பகுதியில் 2ஆம் படிவத்தில் வசிக்கும் பாலசுந்தரம் நிரோசனே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் ஓமந்தைப் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனின் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிளிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது நியமனத்தை செனெட் அங்கீகரிக்கும் பட்சத்தில் அதுல் கெசாப்பிற்கு பின்னர் அலைனா டெப்பிளிட்ஸ் இலங்கை தூதுவராக பணியாற்றுவார். தற்போது நேபாளிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றும் அலைனா டெப்பிளிட்சையே டிரம்ப் இலங்கை தூதுவராக நியமித்துள்ளார். Read more

சட்டவிரோதமாக ஒரு தொகை ரூபாய்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முற்பட்ட இந்திய கணக்காய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க வானுர்தி தள சுங்க தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசினோ விளையாட்டு மூலம் பெற்றுக் கொண்ட 64 லட்சத்து 1840 ரூபாய்களை சுங்கத்திற்கு அறிவிக்காது இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல தடவைகள் அவர் கெசினோ விளையாட்டின் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக சுங்க பிரிவி தெரிவித்துள்ளது. Read more