Header image alt text

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் அநீதிகளை கண்டித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம், Read more

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும்போது அவற்றில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்பட உள்ளது. அவற்றை ஸ்தாபிப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாயை இலங்கை இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more

கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன்கட்டுப் பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராம விஸ்தரிப்பு திட்டக்காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவுப்பொலிஸார் இன்று குறித்த இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். Read more

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இம்மாதம் 24ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

12 வருட காலமாக இருக்கின்ற தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எம்.கே. காரியவசம் கூறினார். Read more

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தம்மை உடனடியாக இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து எதிர்ப்பில் ஈடுபட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

அதன் சிரேஷ்ட அதிகாரியொருவருக்கு குறித்த மனுவை கையளித்த பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்ட சைட்டம் மாணவர்கள் பின்னர் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அடைந்தனர். Read more

மலேசியாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 92 வயதுடைய முன்னாள் பிரமதர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று 9 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டு எதிரணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்தனர். Read more

வடக்கு மாகாண முதலமைச்சர் சீவீ.விக்னேஸ்வரனால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்ட உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்தே இந்த உதவிகள் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை வடக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் வாராந்தம் நடைபெறும் பொதுமக்கள் சந்திப்பின்போது வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் தமக்கான வீட்டுத் திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். Read more

விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கான, நீதித்துறை திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மேலதிக 67 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. Read more

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ரயிலில் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன்போது குறித்த ரயிலில் பயணிகள் குறைவாக இருந்தமையை பயன்படுத்திக் கொண்ட சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். Read more