Header image alt text

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையானலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. Read more

சய்டம் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்வதானால் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமலும், சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு நிறைவுற்றதன் பின்னர் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் சென்று இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. Read more

மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளது தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, அந்த பணிகளை 4 மாதங்களில் நிறைவு செய்து, அதன் அறிக்கையை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளித்துள்ளது. Read more

இலங்கையின் நல்லிணக்க மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டோங் லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நிரந்தர அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைமையை இந்த செயற்பாடுகள் உறுதிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

லண்டனில் இருந்து வெளியாகும் ´தி கார்டியன்´ (The Guardian) இணையத்தளம் உலகின் சிறந்த 18 புகையிரத பயணங்கள் பட்டியலிட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள மிகச் சிறந்த 18 புகையிரத சேவைகள் பட்டியலில் ஆசியா கண்டத்தில் இலங்கையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி புகையிரத சேவையும் இடம்பெற்றுள்ளது. Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ காரணமாக விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவை அண்டிய பகுதிகளில் அதிக புகை பரவியுள்ளது. மேலும் தீ பரவலால் விமானப் போக்குவரத்துக்கோ விமானப் பயணிகளுக்கோ எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லையென விமானநிலையம் தெரிவித்துள்ளது. Read more

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் இருந்து வாக்குமூலத்தை பெற நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் முன்வைத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த அனுமதியை வழங்கியுள்ளார். அத்துடன் அவரது வங்கி கணக்குகளை பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read more

நீண்டகால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பான தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது.

அத்தியாவசிய சேவைகள் இடையூறின்றி முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்ப தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார். Read more

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இப்பலோகம பகுதியில் உள்ள பெலும்கல எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அழித்தமை தொடர்பில் இவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அநுராதபுர மாவட்டத்தின் முகாமையாளரும் தொழிநுட்ப அதிகாரியுமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.