சட்டவிரோதமாக ஒரு தொகை ரூபாய்களை நாட்டிலிருந்து கொண்டு செல்ல முற்பட்ட இந்திய கணக்காய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க வானுர்தி தள சுங்க தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசினோ விளையாட்டு மூலம் பெற்றுக் கொண்ட 64 லட்சத்து 1840 ரூபாய்களை சுங்கத்திற்கு அறிவிக்காது இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல தடவைகள் அவர் கெசினோ விளையாட்டின் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக சுங்க பிரிவி தெரிவித்துள்ளது.43 வயதான அவர் பெங்களூர் கர்நாடக மாநிலத்தின் கணக்காய்வாளராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.