உடுப்புக்குளம் பகுதியில் வைத்து, நேற்று இரவு 7.30 மணியளவில், தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – தங்காலை வழிப் போக்குவரத்து பஸ் மீதே,இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பஸ் சாரதி காயங்களுக்கு இலக்கான நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.