இலங்கை அரசியலில், இனிவரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ள விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஐ.நா பொதுசெயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால செயற்பாடுகள், ஜனநாயக விரோத செயற்பாடுகளாக காணப்படுவதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்சியாக ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும், அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இராஜாங்க திணைக்களம் இதன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்சநீதிமன்ற கருத்தை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கோரவுள்ளதாக கூறப்படுகிறது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்பே அவர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளது.