ந.லெப்ரின்ராஜ்
ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரணில் விக்கிரமசிங்கவையோ மகிந்த ராஜபக்சவையோ நாங்கள் நம்பவில்லை. இவ்விருவரும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று நாங்கள் நம்பவில்லை அத்துடன் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நாசகார செயலை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டிருப்போமேயானால் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி : நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைய விருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு சுமுகமான நிலைமை உருவாகவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளும், வீடுகளும் விடுவிக்கப்படும், ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் எம்மால் சடுதியாக எதுவும் செய்ய முடியாது என பாராளுமன்ற நாமல் ராஜபக்ச தன்னை சந்தித்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியான இவர், இலங்கை திட்டமிடல் சேவை பிரிவின் முதல் தர அதிகாரியாவார்.
கொழும்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், 8 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 அதிகாரிகளும் கேகாலை சிறைச்சாலைக்கு இணையாக கடமையாற்றுபவர்களென சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொட்டாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.