ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவர் என ஜனாதிபதி கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றம் பல தடவைகள் கூடிய போதிலும், பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. Read more
ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துக்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், இந்த முறைமையை நிராகரிக்கும் வகையிலேயே உள்ளதென்றும் இதனால், எதிர்காலம் குறித்து நாம் தீர்க்கமாக சிந்திக்க வேண்டுமென, ஜனாதிபதியால்,
பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர்.
புத்தளம் நாத்தாண்டிய வலஹப்பிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.