Header image alt text

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் மற்றும் 1 உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு, Read more

வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லோட்டஸ் சுற்று வட்டப் பகுதியிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது இவ்வாறு கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலையற்ற பட்டதாரிகளின் குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும். இலங்கை மக்கள் தொகையில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையுடையோர் என விசேட தேவையுடையோர் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட தேவையுடையோருக்கான உரிமை சட்டம், இந்நாட்டில் 22 வருடங்களாக புதுப்பிக்கப்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் 8 மணிக்கும் முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சார்திகள் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில் படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் உடுவிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான 119ற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்யுலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். Read more

எழுபதாவது அகவையில் தடம்பதிக்கும் தோழர் ஜெகநாதன் அவர்கட்கு கழக ஜேர்மன் கிளையின்

பிறந்தநாள் வாழ்த்துகள்.

கழகம் ஸ்தாபித்த நாள்முதல் மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் பேரன்போடு, நாற்பதாண்டுகள் ஜெர்மனி நாட்டின் கழகக்கிளை அமைப்பாளராகவும், தற்போது கழக சர்வதேச விவகாரங்களின் இணைப்பாளராகவும், கழக கிளைத் தோழர்களினதும், ஆதரவாளர்களினதும் போசகராகவும், ஆசானாகவும் செயற்பட்டுவரும் ஜெகநாதன் அவர்களோடு நாமும் சேர்ந்து பயணிக்கின்றோம்.

இன்று எழுபதாவது அகவையில் தடம் பதிக்கும் தோழர் சகல சௌபாக்கித்தோடும் வாழவேண்டும்.

நன்றி.

இப்படிக்கு
ஜேர்மன் கழக கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 2250 ரி56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி செல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமில் உள்ள தேடுதல் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய உரையாடல்களின் போதும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை, ஆனால், எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளராகத் தான் இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read more

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8மாத சிசுவொன்று கொலைசெய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுக்காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர், குழந்தை அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பின் குழந்தை நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more