மதவாதக் குழு ஒன்றினால் நேற்று உடைக்கப்பட்ட மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கான வளைவை மீண்டும் தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைப்பதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வளைவு நேற்று குழு ஒன்றினால் உடைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மன்னார் காவற்துறை நீதவானிடம் முறையிட்டமைக்கு அமைய, முறைப்பாட்டை விசாரணை செய்த பதில் நீதவான் இ.ஹயஸ் செல்தானோ, குறித்த வளைவை தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைக்க அனுமதி வழங்கியுள்ளார். இதேவேளை, மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்காக சீரமைக்கப்பட்ட வளைவு நேற்றையதினம் மதவாதக் குழு ஒன்றினால் உடைக்கப்பட்டமைக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வௌ;வேறு இலக்கத் தகடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மாந்தை சந்தியில் பலவருட காலமாக தற்காலிக அலங்கார பலகையொன்று காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு உள்நாட்டு படகுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மஹா சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ம் திகதி, நாளை மறுதினம் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
நாட்டில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தைச் சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல, இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.
சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 5ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் அவர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.