Header image alt text

மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து இலங்கை சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை இல்ஙகை மீள புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. Read more

இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மித்ர சக்தி’ கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் 9ம் திகதிவரை தியதலாவ முகாமில் இடம்பெறும் என இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கையில் 120 சிப்பாய்கள் வீதம் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா கடற்படைக்கு இடையில் முதன்முறையாக இடம்பெறும் பாரியளவிலான கடற்படைப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா கூட்டு குழு இன்று இலங்கை வந்துள்ளது. Read more

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. Read more

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு விடுதலை கிடையாது என்றும் ஏழுபேர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் நேற்று பிற்பகல் 1மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நல்லூர் யமுனா ஏரியைச் சேர்ந்த 79 வயதான சேது அன்ரனி என்பவரே உயிரிழந்தார்.

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டது. 49 சிசி மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவத்தில் படுகாயமைடந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டநிலையில் உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைதுசெய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

யாழ். அல்லைப்பிட்டி ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர், மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 21 வயதான நிதர்ஷன் என்பவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போது உயிரிழந்தார் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வீட்டுத் திட்டத்துக்கான பணம் உரியமுறையில் வழங்கப்படவில்லையென தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராமத்து மக்கள் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் கூறுகையில், வீடமைப்பு அதிகார சபையினால் 140 வீடுகள் எமது கிராமத்துக்கு வழங்கப்பட்டன. ஆதற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வந்தநிலையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையால் மிகுதி பணம் எமக்கு தரப்படவில்லை. நாம் காணி பத்திரங்களை ஈடு வைத்தும், கடன் பெற்றும் வீடுகளை பகுதியளவில் அமைத்துள்ள நிலையில் அதனை பூரணப்படுத்த முடிhயதநிலையில் இருக்கிறோம். Read more

மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் இன்றுபிற்பகல் 2.15அளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலையமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பாக பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை நேற்றைய தினம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதன்ரூ காரணமாக வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமைகள், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுப்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையின் ஊடாக, Read more

முதல் முறையாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக பாடசாலை பரீட்சையினை Online மூலம் நடாத்துவது சாத்தியமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உயர் தர மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்ப பரீட்சை மார்ச் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இரு அமர்வுகள் மூலம் நடத்தப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தோற்றவுள்ளனர். Read more