தந்தை செல்வாவின் சிரார்த்ததின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் தந்தை செல்வா அறங்காவல் சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய ஜெபநேசன் அடிகள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்,
திரு.சரவணபவன், டெலோ அமைப்பின் தவிசாளர் திரு.சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு மாகாணசபையின் தவிசாளர் திரு. சி.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் திரு.ஆனோல்ட், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், பரஞ்சோதி, மற்றும் வலிதென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் ஜெபநேசன் மேலும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், Read more
கல்முனை சாய்ந்தமருது பகுதியில் தற்போது பாதுகாப்பு தரப்பினருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது. அங்கு சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்புக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது.
யாழ். சங்குவேலி ஸ்ரீ அம்பாள் சனசமூக நிலைய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்க பரிசளிப்பு விழா நிகழ்வில் சிக்கன கடன் கூட்டுறவு வங்கியின் முகாமையாளர் திரு. சிவநாயகம், உடுவில் பிரதேச சபை சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் திருமதி. மலர்மகள் தயாபரன்,
புதிய பிரதம நீதியராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று முற்பல் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த ஹேமசிறி பெர்ணான்டோ, நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பதில் பாதுகாப்புச் செயலாளராக, துசித்த வணிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சைனா ஈஸ்டன் விமான சேவை கொழும்பு மற்றும் ஷாங்காய்க்கு இடையில் வாரத்திற்கு 4 முறை செயற்படுத்தப்பட்ட விமானப் பயணங்களை மே மாதம் 1ஆம் திகதி முதல் ரத்துச் செய்ய தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மாதம் 1ம் திகதி முதல் 39 நாடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவிருந்த விசா நிவாரணம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுபாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரில்லா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாயார் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.