வவுனியா – ஓமந்தை பிரதேசத்தில் நேற்று இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த மோதலின் போது உந்துருளிகள் இரண்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஓமந்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
		    
கொமாண்டே படையணிக்கு புதிய தளபதியாக இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. கனேமுல்லை பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொமாண்டே படையணி தலைமையகத்தில் சம்பிரதாய நிகழ்வுடன் பதவி பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. 
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராகப் புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீதமிந்த, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, நேற்று ஆளுநரின் செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். 
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளது. 
எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் யூ.கே. ரேணுக்க இதனைத் தெரிவித்துள்ளார். 
எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில தொடருந்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது பாதுகாப்பு படையினர் வசம் 13,497 ஏக்கர் விஸ்தீரனமான காணியே உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 
லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 
குடும்பத் தலைவர் ஒருவரை கோடாரியால் கொத்திக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும்’ என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.