பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. Read more
ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் பலரும் தற்பொழுது இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றமையை காணமுடிகின்றது.
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகப்படும் வகையில் நபர்கள் மற்றும் வாகனங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து அறியக் கிடைத்தால், அதுபற்றி அறிவிக்க, இராணுவத் தலைமையகம் விசேட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
கேகாலை, வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH-3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்புகொண்டு ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.