இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் வடக்கு கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து மலர்மாலை அனுவித்து, மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரினை முதன்முறையாக ஏற்றிவைத்திருந்தார். Read more
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) அவர்கள் நேற்று 17.05.2019 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
யாழ். இணுவில் மத்திய கல்லூரியின் மைதானத்துக்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.05.2019 நடைபெற்றது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கொர்வின் தெரிவித்துள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணினி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று மாலை மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். காஞ்சூரங்குடா – சிறிவள்ளிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 15) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் இன்றையதினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் (22) புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.
தேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை, சற்றுமுன்னர் முதல் நீக்கப்பட்டதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.