உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு இணையானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த குண்டுகள் வெளிநாட்டிலிருந்து வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹஷீம் குண்டு தயாரிக்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. வெளிநாட்டவர்களின் உதவியுடன் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.கடந்த காலங்களில், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த பயங்கரவாதிகளால் இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வெடி குண்டுகள் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பினால் பயன்படுத்துகின்றமை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.