தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. Read more
		    
கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு (ஷரி-ஆ) அனுமதி வழங்காதிருக்கவும் மத்ரசாக்களை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பு குறித்த குறுந்தகவலொன்றை (SMS) தனது கையடக்கத் தொலைப்பேசியில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சி.4 ரக வெடி பொருட்கள் 270 கிராம் மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றையும் பொலிஸார் மீட்டதுடன், குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. கடந்த மாதம் 21ம் திகதி காலை, இலங்கையில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 விருந்தகங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
28 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேடப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கலகெதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பபான அல்கைதாவின் யுத்தப் பயிற்சிகள் தொடர்பான இறுவட்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை, திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் வைத்து, பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.