நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து நிலைமையயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குறித்த பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். உடன் அமுலுக்கு கொண்டுவரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலை குண்டுதாரிகளினால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், தேசிய தேசிய தவ்ஹீத் அமைப்புக்கு சொந்தமான பயிற்சி முகாம் ஒன்று மட்டக்களப்பு – காத்தான்குடி – ஒல்லிகுளம் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவையான நிதி, இணையத்தளங்கள் ஊடாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சர்வதேசப் பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். சாவகச்சேரி கோவிற்குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசேட், இராணுவச் சின்னம் மற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரிடம் ஒரு கோடி 78 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையைக் கையளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பின் ஊடாக பாதுகாப்பு சூழல் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.