அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2019.05.29 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று புதிய சுற்றறிக்கை குறித்த அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

வேறுவேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியது. இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.