யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொறுக்கி வீட்டின் முன்பாக இருந்த வாகனத்தையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சித்த மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இச் சம்பவம் நேற்றுஇரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டுகாரர்கள் அவசர தேவையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ள நிலையில் வீட்டில் யாருமில்லாத்தால் வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது. Read more
நாடளாவிய ரீதியில் இதுவரை சகல பொலிஸ் நிலையங்களிலும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 1060 கைத்துப்பாக்கி ரவைகளை தாம் கைப்பற்றியதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.
அதி நவீன வசதிகளுடன் சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டே பெலவத்தை அகுரேங்கொடயில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 46 கைதிகளில் 20 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில், டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் திருநாவற்குளத்தைச் சேர்ந்த 9வயது சிறுமியான சுரேஸ் பிரியங்கா உயிரிழந்தமைக்கு போக்குவரத்து பொலிஸாரின் அசமந்தமே காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வங்காள விரிகுடாவிற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் வளிமண்டலத்தில் கடந்த தினங்களில் தூசு துகள்கள் அதிகரித்திருந்தன. எனினும் இது சாதாரண மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலானது இல்லை என்று, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை இயந்திர, சிவில் மற்றும் மின் அதிகாரிகள் அடையாள வேலைநிறுத்தமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.