சுவிஸ்லாந்துக்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ஆ.பிறேமானந்தன்(ஆனந்தன்), செயலாளராக ஜீ.சண்முகராசா, நிதிப் பொறுப்பாளராக ம.முருகதாஸ் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக சி.ருசாந்த், சி.பாபு, க.கணேசலிங்கம், இ.இராஜேந்திரன் ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும், ஐ.தே.கட்சியின் தலைமைத்துவ பொறுப்புக்களில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவும் நீடிக்கவுள்ளதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து இன்றையதினம் சந்தித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இலங்கையின் அனைத்து ஆசிரியர் சபை ஊழியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்காக தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மேம்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரியவை பதவி விலக வேண்டாம் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உண்மையான விடயங்களை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ – பண்டாரவளை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.