பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபா சலுகை கடன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர் கடனை மீள செலுத்துவதற்கு இயலும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குப்பத்திரம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இதனூடாக வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் எழுத்து மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் வீண் பணச்செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீண் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் போலி மரணச் சான்றிதழ் தயாரித்த முல்லிகைத்தீவு கிராம சேவகர், மரண விசாரணை அதிகாரி உட்பட மூவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில், முல்லைத்தீவு நீதவான் எஸ் லெனின்குமார், விடுவித்துள்ளார். அத்துடன், வழக்கு விசாரணை, நவம்பர் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு – மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசித்து வருகின்றார்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு படைமுகாம் அண்மித்த காட்டுப்பகுதியில் இருந்து, நேற்று அகற்றப்பட்ட நிலையில் காணப்பட்ட 654 வெற்று மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை சோதனை செய்தபோது, அவற்றில் இருந்து வெடிபொருள்கள் அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டுள்ள மிதிவெடிகளாக இவை இருக்கலாமென படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டில் பல்வேறு நோய்களுக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணங்களை அதிகமாக உட்கொண்ட ஒரு இலட்சம் பேர் வரையில் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளால், போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சபையின் தலைவர் விசேட வைத்தியு நிபுணர் லக்நாத் வெலகெதர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3287 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3284 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்றுமாலை மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன், நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 182ஆக குறைந்துள்ளது.
கண்டி – பூவெளிக்கடை பகுதியில் மாடிக்கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை தாழிறிங்கிய அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட குழந்தை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இன்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் தாழிறிங்கிய நிலையில், அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது விழ்ந்து அனர்த்ததிற்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த மாதம் 14ஆம் திகதி தொடக்கம் கொழும்பின் 4 பிரதான வீதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதிகள் நாளையிலிருந்து கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு நாளைமுதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வடக்கு கட்டையர்குளம், மதியாமடு பகுதியில் கிணற்றில் இருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள கிணற்றை அதன் உரிமையாளர் இன்று துப்புரவு செய்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை மீட்டுள்ளனர். நீதிமன்ற அனுமதி பெற்ற மேலதிக அகழ்வு பணி முன்னெடுக்கப்படவுள்ளது.