 பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அங்கு நிவாரண விலையில் விமான சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டப் பணிகளின் கீழ் விமான பயண சீட்டுக்கான கட்டணம் வருடம் முழுவதும் நிவாரண முறையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரத்மலான விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு மத்தள, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி ஊடாக கட்டுநாயக்க அல்லது இரத்மலான விமான நிலையம் வரை உள்ளக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அசோக அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்)