வவுனியா‬ புதிய சின்னக்குளம் மயான சங்கத்தினருக்கு ‪புளொட்‬ நிதியுதவி.!(படங்கள் இணைப்பு)

ssவவுனியா புதிய சின்னக்குளத்தில் மரண சடங்குகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளும் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க, கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் மாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவாக ஒரு தொகை உதவிப்பணம் கழகத்தின் போர்த்துகல் (கொலண்ட்) கிளையினரால் வழங்கப்பட்டது. இவ் உதவி கழகத்தின் மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நேற்று சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),

இக் கிராமத்தின் மீள் குடியமர்வில் 1990 காலப்பகுதியில் மறைந்த உப தலைவர் தோழர் மாணிக்கதாசனின் பங்கு அளப்பெரியது. அத்துடன் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எமது கழகத்தின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட கந்தையா சிவநேசனுக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தேர்தல் காலங்கள் மட்டுமல்லாது எந்நேரமும் மக்களுடன் மக்களுக்காக வாழும் எமது அமைப்பு, இழந்த தோழர்களின் முக்கியமான உங்கள் கிராமத்தில் ஒருவர் தோழர் நடேஷ், அவரின் நினைவுகளும் வீரமும் 1983 காலப்பகுதி முதல் நான் நன்கு அறிவேன். உங்கள் ஊரின் மீதும் எல்லைக்கிராமங்களின் மீதும் அவர் கொண்ட பற்று அளப்பெரியது. அவரின் நினைவுகள் இன்னும் எம் மனக்கண் முன் நிழலாடுகிறது, தோழரின் நினைவால் வளர்ந்த இக் கிராமத்தை என்றும் எமது கழகம் மறக்காது.

இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் காண்டீபன், செயலாளர் கேசவன், பொருளாளர் நிகேதன், ஊடக இணைப்பாளர் பிரதீபன், புதிய சின்னக்குளம் கிராம அபிவிருத்தி தலைவர் நாதன், மயான சங்கத்தின் செயலாளர் ஜெ.ஜெயநேசன், பொருளாளர் இரத்தினசிங்கம், உப பொருளாளர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் உதயன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

sssd (3) sdd