சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை-(படங்கள் இணைப்பு)
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மூன்றாவது நாளாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் நேற்;று முன்தினம் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை யாழ். நல்லூர்ப் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இரண்டாம் நாள் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தபோது, புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டுள்ளார்.