புதிய இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியம்-
 இலங்கையில் அரசியல் தீர்வு உட்பட முற்போக்கான சீர்த்திருத்தங்கள் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலம் சாத்தியப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு புதிய அரசியல் யாப்புத் திருத்தத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் குற்றங்களுக்கு தண்டனை அளிக்கவென உள்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும், ஆகையால் கடந்த கால ஏமாற்றங்களை புறந்தள்ளி நம்பிக்கையுடன் புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.