Header image alt text

piyasenaதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவை தொடர்ந்து நவம்பர் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது பொருளாதார அமைச்சின்கீழ், முன்னாள் எம்.பி கே.கே.பியசேனவிற்கு வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் கடந்த 2வருடங்களாக மீள ஒப்படைக்கப்படவில்லை. Read more

university-studentயாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது. அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர். Read more

ritaஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக கண்காணிக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பிலும், பரிந்துரைகள் தொடர்பிலும் இங்கு அவர் தெளிவுபடுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் ரீட்டா குறுங்கால மற்றும் நீண்ட காலத்திற்கான பரிந்துரைகளை முன்வைத்தார். Read more

ssssயாழ்.போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலைமீது மேற்கொண்ட தாக்குதலில் இந்த 68 பேரும் உயிரிழந்தனர். Read more

student-deadயாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று நள்ளிரவு 11.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். Read more

ranilபிரசெல்ஸிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சோஷலிச மற்றும் ஜனநாயகக் கட்சியினரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் சூழல் பாதுகாப்பினூடான சுற்றுலாத்துறை வளர்ச்சி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

rita-sampanthanயுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல், மீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுத்தல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

indian-foriegn-secretaryஇந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்திய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வெளிநாடுகளில் மேற்கொள்ளும் கொள்கையின் கீழ் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனா இலங்கையில் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு ஈடான வர்த்தகத்தை தேடுவதே ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருவதன் நோக்கமாகும் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. Read more

lawyersவட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான பிரச்சாரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் உட்பட வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர். Read more

ganesharajah-judgeமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நீதிமன்ற கட்டடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிபதியாக கடமையாற்றியபோது மேற்கொண்டிருந்த முயற்சியின் பயனாக நீதியமைச்சினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. Read more