யாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்குப் பிணை கிடையாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று கூறியுள்ளார்.
வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிணை மனு, நேற்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து, பிணை மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். Read more








