Header image alt text

berlin-2ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நத்தார் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்காடி ஒன்றில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 12 பேர் பலியானதாகவும் 45 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே உள்ள சந்தைத் தொகுதியில் பொதுமக்கள் உணவு பொருட்கள், மதுபானங்கள், மற்றும் இனிப்பு வகைகளை பொதுமக்கள் வாங்கி கொண்டிருந்த போதும், நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போதும், அங்கு வேகமாக பயணித்த லொறி ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read more

sdafdதுருக்கி தலைநகர் அங்காராவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் உயிரிழந்துள்ளார். அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ட்ரிவ் நேற்று சென்றிருந்தார்.

அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அண்ட்ரிவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட மர்மநபர் பலியாகியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

img-20161219-wa0002

img-20161219-wa0003 தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதிகளுள் ஒருவரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா மயில்வாகனம் (மல்லிகைப்பூ சந்தி திலகர்) உட்பட  இலங்கையின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

மேற்படி சீன விஜயத்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஒன்று…..

img_9990

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் (19.12.2016) சுவிஸ் வாழ் உறவுகளான தீபன் சுகந்தினி தம்பதிகளின் புதல்வி செல்வி. ர.இரஸ்மியா அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

இன்றைய நிகழ்வுகள் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள்கால உறுப்பினருமான திரு மா.கதிர்காமராஜா(புஸ்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு.முத்தையா கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை இந்து அன்பக இயக்குனர் கு.ஜெயராணி(சாமி அம்மா) அவர்களின் முன்னிலையில் வழங்கினார்கள். Read more

img_9902இலங்கையின் நான்காவது இளைஞர் பாராளுமன்றத்தின் பொதுத் தேர்தல் நாடளாவிய ரீதியில் நேற்று 18.12.2016 நடைபெற்றது. இவ் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் சார்பில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழகத்தின் செயலாளர் ஸ்ரீகரன் கேசவன் 390 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அமைக்கப்பட்ட 5 தேர்தல் மத்திய நிலையங்களில், வவுனியா பிரதேச செயலகத்தில் 167 வாக்குகளும், கோவில்குளம் இந்துக்கல்லூரியில் 133 வாக்குகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 65 வாக்குகளும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் 17 வாக்குகளும், செட்டிகுள பிரதேச செயலகத்தில் 8 வாக்குகளும் பெற்று மொத்தமாக 390 வாக்குகளுடன் வவுனியா இளைஞர்களின் குரலாக ஸ்ரீகரன் கேசவன் நான்காவது பாராளுமன்றம் செல்லவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

g3எமது புலம்பெயர் உறவுகளான துசாந்தினி கணாதீபன் மற்றும் நிசாந்தினி தினேஸ் ஆகியோரால் தனது தந்தையான அமரர் சிவகனேசன் கந்தையா அவர்களின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று பாரதி இல்ல சிறார்களுக்கு 42000ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளர்கள்.

எதிர்வரும் 3ம் திகதி பாடசாலைகள் தொடங்கவுள்ள நிலையில் இல்ல சிறார்களுக்கு அப்பியாச கொப்பிகள் போதாமையாக உள்ளது என்று பாரதி இல்ல நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இவ் புலம்பெயர் உறவுகளால் 42000 ரூபா பெறுமதியான அப்பியாச கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.  (வட்டு. இந்து வாலிபர் சங்கம்) Read more

yyமீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாரிய ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்றுகாலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், நடைபெற்றுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read more

keppapilavuமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுள் ஒரு தொகுதி காணி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை கையளிப்பதற்காக ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Read more

arrestஉள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளுடன் மூன்று பேர் பொத்துவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படைப்பிரிவு அருகம்பே முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் 03 மற்றும் 04 ரவைகள் உட்பட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விஷேட அதிரடிப்படை கூறியுள்ளது.

assasடுபாயில் இறந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை சந்திவெளியிலுள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு சந்திவெளியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இளையதம்பி சூரியகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராக தெரியவருகிறது.

இவர் தொழில் நிமித்தம் காரணமாக டுபாயில் ஒரு கம்பனியில் வேலை செய்ததாகவும், விபத்தொன்றின் மூலம் உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் இரண்டாம் திகதி அவர் இறந்த தகவல் சக நண்பர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்தாகவும், அதனையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்தின் மூலம் டுபாயில் இருந்து சடலத்தை இலங்கைக்கு கொண்டுவந்ததாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.