Header image alt text

sri-hettigeதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தமது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையிடம் கையளித்துள்ளார். ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கற்கை நெறியைத் தொடரவுள்ளதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். Read more

housing schemeபொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். Read more

v-k-sasikala

கச்சத்தீவை முன் யோசனையின்றி இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்ததன் காரணமாகவே இந்திய மீனவர்கள் இழப்புக்களுக்கு ஆளாகி வருவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீ.கே. சசிகலா அறிக்கையொன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளார். Read more

vigneswaranவடகிழக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடகிழக்கில் இருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரமளவில் கனடா நாட்டிற்கு பயணமாகவுள்ளனர். இம் மாதம் 15, 16, 17ஆம் திகதிகளாக 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆராம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்தது தெரிவிக்கையில், Read more

sdsdஇரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், ஒரு படகுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது. தற்போது மாலைதீவு துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக இம்மீனவர்கள் இருவரும் இன்று வியாழக்கிழமை காலை தமது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளனர். Read more

sfdfகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றுபகல் 12.30மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர். Read more

ploteகழகத்தின் ஜேர்மன் நாட்டுக்குரிய புதிய நிர்வாகக்குழு தெரிவு-
கடந்த 01.11.2016 அன்று ஜேர்மனியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடலின் முடிவில் கழகத்தின் எட்டாவது பொதுச்சபை கூட்டத்தின் முடிவுகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கீழே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்ட ஜேர்மன் நாட்டுக்குரிய நிர்வாகக்குழுவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது.

Read more

saiva-pragasa-4யாழ்ப்பாணம், வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கடந்த இரு வருடங்களாக அதிபர் பதவி நிலையில் இருந்த திரு. நடராசா ரவீந்திரன் அவர்களின் பணி இடமாற்றம் தொடர்பாக மேற்படி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளது. அதிலே பாடசாலையில் பல அபிவிருத்திகளை முனைப்போடு மேற்கொண்டு வந்த அதிபரின் இடமாற்றம் மனவருத்தம் அளிப்பதாகவும், இவரே தொடர்ந்தும் அதிபராக பணியாற்ற வேண்டுமென்றும் மக்கள் சார்பாக வலயக் கல்விப் பணிப்பாளரின் மேலான கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. Read more

jjjjjjjjjjjjjjjj-3யாழ். புன்னாலைக்கட்டுவன் பிரதேச மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று புதுவருட தினமான 01.01.2017 அன்றிரவு திரு. கெங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதிலே புன்னாலைக்கட்டுவன் கிராமமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றிருந்தார்கள். புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர். Read more

viyalendranஇன்னும் கால நீடிப்பினை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக துறையினர் மற்றும் வர்த்தக துறை மாணவர்கள் உட்பட பல்வேறு துறை மாணவர்களை இணைத்து மட்டக்களப்பு வர்த்தக ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more