Header image alt text

fdfdfdமட்டக்களப்பு, நொச்சிமுனையைச் சேர்ந்த 35 வயதுடைய சுஜிதா தவசீலன் என்ற இளம் குடும்பப் பெண்ணைக் கடந்த இரு தினங்களாகக் காணவில்லை என, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று விட்டு வீடு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த வேளையிலேயே, இவர் காணாமல் போயுள்ளதாக, உறவினர்கள் தெரிவிக்கின்றனர். Read more

ertretrதிருகோணமலை பாலையூற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது நேற்றுமாலை 5.00 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை, காமினி திஸாநாயக்க மாவத்தையைச் சேர்ந்த மரக்கலுகே பிரியதர்ஷன என்பவருடைய முச்சக்கர வண்டிக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

sadsdஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மல்லியப்பு சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மலையக இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் மலையகத்தில் மலையக இந்தியவம்சாவளி தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டனர். அவசர சட்டமூலம் ஜல்லிகட்டுக்கு ஒப்புதலை பெறுவதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தாலும் அதற்கு மாபெரும் அழுத்தத்தை வழங்கிய மாணவர் படையணியை ஆதரிக்கும் வகையிலும் எவ்வித தடையுமின்றி ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. Read more

chinabay oilசீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டு த்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.

வறட்சியை எதிர்கொள்வதற்காக மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு, இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் உள்ள சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த போதும், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எண்ணெய்க் குதங்களை மீள வழங்க மறுத்து வருகின்றனர். Read more

trumpஅமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற நிலையில் வெள்ளை மாளிகையில் கோலாகலமாக விழா நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 8ம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள பிளேர் ஹவுஸில் தங்கினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி நேற்றுக்காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர். பின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளை மாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிக்செல் ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளித்தனர்.
Read more

lanka vietnamஇலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வர்த்தக, சமூக பொருளாதார உறவுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வியட்நாம் பிரதமர் ஹ_யன் ஸ்சுவானுக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு வார்த்தையின்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்பாகவே சில முக்கிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்ப்பதாக வியட்நாம் பிரதமர் தெரிவித்தார். Read more

fonsekaஅமைச்சர் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்வின் கொலை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்று சுமார் 5 மணித்தியாலங்கள் வரை குற்றப் புலனாய்வுப் பிரவினர் சரத் பொன்சேகாவிடம் இவ்வாறு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

maithripalaஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக நேற்றுப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்புக்கு தனது டுவிட்டர் வலைதளத்தினூடாக ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

jallikattuசல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டமொன்று இன்று முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவானவர்கள் இணைந்துகொண்டிருந்தனர். இதேவேளை, இன்று பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற ஏற்பாடாகி உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

former colonel susanthaதிருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லையென பாதுகாப்புத் துறை விசேட நிபுணரான ஓய்வு பெற்ற கேணல் சுசந்த செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து அவர் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் வரலாற்று நெடுகிலும் ஒரு அவதானம் இருந்து வருகின்றது. இவ்வாறு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.