Posted by plotenewseditor on 7 February 2017
Posted in செய்திகள்
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றுவரை தொடர்கின்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இந்த போராட்டத்துக்கு இன்னும் பல இளைஞர்களை திரட்டி ஆதரவு வழங்கும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றையதினம் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர். Read more