மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்று பிற்பகல் கொழும்பு பிரதான வீதி நாவலடி இராணுவ முகாம் முன்பாக ஆரம்பித்துள்ளனர்.
1968ம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் குடியிருந்து பின்னர் 1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தற்போது நல்லாட்சி அரசின் மூலம் இராணுவ பிடியிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் தங்களுடைய காணிகளையும் பெற்றுத் தருமாறு கோரி காணி உரிமையாளர்கள் எட்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more








