Header image alt text

K.Sivanesan Bavanவடமாகாண அமைச்சராக பதவியேற்றுள்ள புளொட் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர் க.சிவனேசன் (பவன்) அவர்கட்கு வவுனியா கோவில் குளத்தில் வரவேற்பு (வீடியோ இணைப்பு) Read more

jeganthan Chief 24.08 (2)வட மாகாண முதலமைச்சர் கௌரவ சீ.வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் புளொட் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்றையதினம் வட மாகாணசபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும், வட மாகாண கால்நடை, விவசாய, நீர் வளங்கள், மீன்பிடி அமைச்சருமான கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் உடனிருந்தார். Read more

bavan01மக்களின் தேவைகளை என்னால் இயன்றவரை பூர்த்தி செய்வேன்: வடமாகாண புதிய விவசாய அமைச்சர் -க.சிவநேசன்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் வேண்டுமென்ற அடிப்படையில் விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற அமைச்சுப் பொறுப்புக்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயலாற்றுவதுடன், மக்களின் தேவைகளையும் என்னால் இயன்ற வரை நான் பூர்த்தி செய்வேன் எனப் புதிதாகப் பதவியேற்றுள்ள வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். Read more

bavan bஅமைச்சர் பதவி ஏற்றதும் முதல் கடமையாக தோழர் பவன் அவர்கள்  வவுனியா கோவில் குளத்தில்  அமைந்துள்ள எமது தலைவர் செயலதிபர் அமரர் தோழர் க. உமாமகேஸ்வரன் சமாதியின் முன்னிலையில் நன்றி செலுத்தும் முகமாக  அஞ்சலி செலுத்திய போது புளொட்டின் மத்தியகுழு தோழர்களான மோகன், சிவம் காண்டீபன் உட்பட கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். Read more

kepapulavu campகேப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக, அவ்விடத்தில் உள்ள இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது. Read more

sfdfdயாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை அயலவர்களால் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அருகில் இருக்கின்ற வீடுகளில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தூர்வாடை வீசியதையடுத்து இது தொடர்பாக தேடிப்பார்த்துள்ளனர். இதன்போது குறித்த காணிக்குள் இருந்த பாவனையற்ற கிணற்றுக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்வாடை வீசுவதும் அவர்களால் கண்டறியப்பட்டிருந்தது. Read more

sdfsdsdவவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று அழிக்கப்பட்டுள்ளன. இந்த கைக்குண்டுகள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றுமுறிப்பு பகுதியில் பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த 8 கைக்குண்டுகள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தன. இவற்றில் 6 கைக்குண்டுகள் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

bavan01தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஸ்ட்ட உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட வட மாகாணசபை உறுப்பினருமான கந்தையா சிவநேசன் இன்றைய தினம் வடமாகாண கால் நடை, விவசாய, நீர் வளங்கல், மீன்பிடி அமைச்சராக ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

northern-முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல்குற்றச்சாட்டுக்களையடுத்து இடம்பெற்ற விசாரணையை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். அவர்களது இடத்திற்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அனந்தி சசிதரன் மற்றும் ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த க.சர்வவேஸ்வரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். Read more

northern_provincial_council1வட மாகாண அமைச்சர் சபை கூட்டத்தில் பா.சத்தியலிங்கம் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த நிலையில், அமைச்சர் சபை கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது இதில் பா.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. Read more