யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடையுடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்குவில் கிழக்கு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (18) என்ற இளைஞரே சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில் கோப்பாய் பகுதியில் கடையொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி காணொளியின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். Read more








