Posted by plotenewseditor on 6 January 2018
Posted in செய்திகள்
பூநகரி – செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதற்கு சாட்சியாளராக யாழில் இருந்து அவ் வீதியூடாக சென்று கொண்டிருந்த பார ஊர்தி சாரதி ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்து விசாரணைகள் இடம்பெற்றன.
இந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரியினதும் மரண விசாரணை அதிகாரியினதும் அறிக்கைகளின் பிரகாரம் குறித்த நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ஒருவர் பொலிசாருக்கு வைத்தியசாலையில் வைத்து வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக, குறித்த விபத்து பார ஊர்த்தியுடன் மோதுண்டு இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் தரப்பு சாட்சியாக இருந்த பார ஊர்த்தி சாரதியை கைதுசெய்துள்ளனர். Read more