Header image alt text

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து புதிய பொலிஸ் நிலையத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

நீண்டகாலமாக பொலிஸ் நிலையம் இல்லாத நிலையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் இயங்கிவந்த நிலையில் இன்று அதற்கென காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. Read more

வவுனியா ஓமந்தை புகையிரத நிலையத்தின் அருகாமையில் பிரதேச மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஓமந்தை மற்றும் விலத்திகுளம் பிரதேசங்களில் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள குறுக்கு விதிக்கு புகையிரத பாதுகாப்பு கடவையை அமைக்குமாறு கோரி மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை வந்துள்ள நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி, ஜெனரல் ராஜேந்திர சேத்திரி இன்று முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டரில் முல்லைத்தீவிற்கு சென்ற நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானியை முல்லைத்தீவு படைத்தலைமையகத் தளபதி வரவேற்றுள்ளார். Read more

வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் பரமநாதன் அவர்களை ஆதரித்து யாழ். குப்பிளானில் நேற்று (19.01.2018) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள். Read more

வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் திருமதி சிவரதி அவர்களை ஆதரித்து யாழ். இணுவிலில் 15.01.2018 திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள். இக்கூட்டத்தில் தாவடி வேட்பாளர் திருமதி சிவரதி, உடுவில் கிழக்கு வேட்பாளர் சந்திரவதனா ஆகியோரும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். சுன்னாகத்தில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் இ.குமாரசாமி அவர்களை ஆதரித்து கடந்த 13.01.2018 சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள். Read more

யாழ். கரவெட்டியில் வேட்பாளர் பொன்னையா மாஸ்டர் அவர்களை ஆதரித்து 18.01.2018 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.

Read more

தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு பெற்றுத் தரப்படும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பலங்கொடையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாடளாவிய ரீதியில் சுமார் 650,000 வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளன. இந்த வழக்குகள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படும். “குற்றவாளிகளுக்கும் கொலையாளிகளுக்கும் உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டியது நீதிமன்றங்களினது கடமை. Read more

2017 – 2018ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்கும் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாணவர்களின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் மேலும் ஏழு நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது. Read more

மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கில பாடத்தை கற்பிக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமையவே இத்திட்டம் உருப்பெற்றுள்ளது. இவ்வாறு ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கில பாடவிதானத்தை கற்பதற்கு தேவையான பாடப் புத்தங்களை அச்சிட்டு வினியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். Read more