Header image alt text

எவ்வித இடையூறு வந்தாலும் எதிர்வரும் 30ம் திகதி பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு வவுனியா வளாகத்தின் மாணவர்கள் விடுதியில் வைத்தே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை அண்மையில் யாழ் பல்கலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் மூவர் காயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

நேற்று இரவு மேசன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த சஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வேகக் கட்டுப்பபாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மின்சாரசபை காரியாலயத்தில் மின்சார அத்தியட்சகராக கடமையாற்றி வந்த க.உமாரமணன் (33வயது) என்பவருடைய சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more