Header image alt text

வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் சேவையில் ஈடுபடுவதுடன், வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கடந்த 3 தினங்களாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாதென பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். பணிப் புறக்கணிப்பின் மூன்றாம் நாளான இன்று வடமாகாண முதலமைச்சரை, கொழும்பில் இருந்து வருகை தந்த தொழிற்சங்கத்தின் குழுவினர் முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போது, வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு ஒதுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரையிலான காலப்பகுதிக்குள் 253 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

பெப்ரல் அமைப்பிற்கு இதுவரையிலும் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதியில் இருந்து இதுவரையிலுமான காலப்பகுதியில் காவல்துறை தலைமையகத்திற்கு தேர்தல்கள் தொடர்பிலான 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 24 சட்ட மீறல்களும் 51 தேர்தல் முறைப்பாடுகள் உள்ளடங்குகின்றன.