Header image alt text

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளையதினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை 9மணிக்கு ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் குறித்து அறிவிப்பதற்கான கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more

எதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கான பாதுகாப்பு குறித்து முதல் கட்ட ஆலோசணை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவலாயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய – இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்க விழா பெப்ரவரியில் நடைபெற உள்ளதை தொடர்ந்து விழாவுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஆவனங்கள் குறித்து நேற்று ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசணை கூட்டம் ஒன்று நடைபெற்றது. Read more

உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு மேலதிகமாக இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுக்கான விநியோகிம் இன்றும் இடம்பெறுவதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். Read more

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 557 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இவற்றில் 94 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வன்முறைகளால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நேற்றைய தினம் சில தேர்தல் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.