Header image alt text

இலங்கையின் 70 வது சுதந்திர தின விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்துக்கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்டும், இளவரசி பொஷியும் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று பகல் 12.40 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7000 தொண்டர்களை தயார் நிலையில் இருப்பதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 1000 பேர் தபால்மூல வாக்களிப்பு பணிகளின் கண்காணிப்பு பணிகளிலும், 4000 இற்கும் மேற்பட்டடோர். பேர் வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், 1500பேர் 350 நடமாடும் வாகனங்கள் மூலம் நடமாடும் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடவுள்ளதாக பஃரல் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஜீவ ஜயலத் குறிப்பிட்டார். Read more

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முற்பகல் சந்தித்தனர்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் இலங்கை தொடர்பான செயற்பாட்டுக்குரிய குழுவின் தலைவர் சிரேஷ்டாபதி சிவராஜ் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். Read more

மன்னார் மாவட்ட நுழைவாயில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த கட்டிடத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் முன் வைக்கப்பட்டு வந்தது. Read more

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியொன்றில் இருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து கிணற்றுக்குள் காணப்பட்ட ஆயுதங்களை மீட்டிருந்தனர்.

இவற்றில் ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் ஒரு தொகையும், அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன்றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார்ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின்போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனயவுப் பிரிவினரால் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் சிறையில் இருந்து கலவரத்தின் இடை நடுவே முச்சக்கர வண்டியில் தப்பியோடும்போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் 8 பேரும், பொலிஸ் விஷேட அதிரடிப்படை மீது தாக்குதல் நடத்தும்போது பதில் தககுதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், கலகம் அடக்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனயவுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது. Read more