Header image alt text

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இன்று மாலை இலங்கை வந்தடைந்துள்ளார். 35 தூதுவர்கள் அடங்கிய குழுவொன்றுடனேயே அவர் இலங்கை வந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று, இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாமை காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளமை இதற்கு காரணமாகும்.

மறு அறிவத்தல் வரை குறித்த நிலையம் மூடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடவுச்சீட்டு மற்றும் வீசா சேவைகள், தூதரகத்தின் ஊடாக தொடர்ந்தும் இடம்பெறும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் வருட மாணவர்களான அவர்கள், கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு, 4ம் வருட மாணவர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் சார்பில் பிணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, நீதவான் அதனை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் – பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் நேற்றிரவு திடீர் என ஏற்பட்ட தீயின் காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது வாடியே எரிந்து சாம்பலாகியுள்ளது. இதன்போது மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்தியம், மீன் பிடி வலைகள் உட்பட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீனவர் கவலை தெரிவித்தார். Read more

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் காண்டீபனின் தேர்தல் காரியாலயம் நேற்றுமாலை 4.30மணியளவில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத் தலைவரும், மாகாணசபை உறுப்பினருமான டொக்டர் சத்தியலிங்கம், வட மாகாண அமைச்சர் க.சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், பா.கஜதீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சேனாதிராஜா, சுந்தரலிங்கம் காண்டீபன், சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), Read more

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், 3 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்றுகாலை 9மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. மாலை 4மணிவரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக சுமார் 560,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகின்ற தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்கு தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more

திருகோணமலை தோப்பூர் களப்புக் கடலில் சுமார் 600 இற்கும் அதிகமான மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இறங்குதுறை இன்மையால், நீண்ட காலமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக இந்த மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மீன்பிடி உபகரணங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஓய்வு மண்டபம் இல்லாமையும் இவர்கள் எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சினையாகவுள்ளது.