Header image alt text

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் அமல் ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று, வெள்ளைக்கல்மலைப் பகுதியில், காட்டு யானையொன்றின் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் 51 வயதான முத்துலிங்கம் சுந்தரலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர், மாடுகளைப் பராமரித்துக் கொண்டு அப்பகுதிலுள்ள வாடியில் இருந்தபோது, காட்டிலிருந்து வந்த யானைகளில் ஒன்று, அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது. Read more

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. முனசிங்கவும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தஸநாயக்கவுமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர்.

விஷேட பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பீ முனசிங்க, சப்ரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் தகவல் தொழில் நுட்ப பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தஸநாயக்க விஷேட பாதுகாப்பு பிரிவுக்கும் இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர். Read more

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் நியமனம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதிய அதிபர் நியமனத்தை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் கடற்படை முகாம் அமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

காணி மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் மேலதிக செயலாளர் சம்பத் சமரகோனால் இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அண்மித்ததாக தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமைத் தொடர்பில் இதுவரை 65 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் சுவரொட்டிகளை ஒட்டியமை மற்றும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பதாகைகள் மற்றும் வேட்பாளர் இலக்கங்களை வாகனங்களில் காட்சிப்படுத்திச் சென்ற 12பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ் குடாநாட்டிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பலாலி விமான நிலையத்தினை நேற்றுக்காலை 10.00 மணியளவில் சென்றடைந்த ஐவர் அடங்கிய இந்தக் குழுவினர், யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராய்ச்சியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர், நண்பகல் 12.30 அளவில் ஆளுநரை சந்தித்துள்ளனர். Read more

வட கொரியா தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாஹாரப்பனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த இணக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தலில் உள்ள அவசியம் குறித்தும் அவர்களுக்க இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.